செவ்வாய், செப்டம்பர் 13, 2011

உங்களுக்கும் இது எல்லாம் நடக்குதா அண்ணே?

அண்ணே நான்தாண்ணே 10 ஓட்டு பதிவரு பேசுறேன்..  

எல்லோரும் நல்லா இருக்கீங்களா?  திடீர்ன்னு காலையில ஒரு யோசனை எதுக்கெல்லாம் நான் சலிச்சுக்கிறேன்னு அதோட விளைவு கீழே இருக்குறது, உங்களுக்கும் அப்படித்தானா? கொஞ்சம் சொல்லுங்களேன்   


  1. எப்போதெல்லாம் நான் வெற்றிக்கான சாவியை கண்டுபிடிக்கும் போது  பூட்டை யாரோ மாற்றிவிடுகிறார்களே
  2. நான் மது அருந்துவதால் எந்த பிரச்சனையும் தீர்க்க முடியாது, ஆனால் மீண்டும் யோசித்தால் பால் அருந்துவதால் கூட தீர்க்க முடியவில்லையே!!
  3. எனக்கு தேவை இல்லாத நேரத்தில் தான் கடன் வாங்கச்சொல்லி தினமும் தொலைபேசியில் அழைப்பு வரும்
  4. நான் வாழ்க்கையில் விரும்பக்கூடிய அனைத்து விஷயங்களும் சட்டவிரோதமாக அல்லது அதிக விலை உடையதாக இருக்கிறதே
  5. எனக்கும் பணக்காரன் ஆக திட்டம் இருக்கிறது ஆனால் எல்லா நேரத்திலும் அது சாத்தியப்படுவதில்லை
  6. வெற்றி பெற முடியவில்லையா, நான்  தோற்றத்தக்கான அடையாளங்களை முதலில் அழித்துவிட எத்தனிக்கிறேன்
  7. நான் ரொட்டியின் எந்தப்பக்கம் வெண்ணையை தடவினாலும், கீழே விழும் பொது வெண்ணை இருக்கும் பக்கமே மண்ணில் விழுகிறதே  
  8. நான் எதையாவது குறிப்பிடும் போது அது நல்லது என்றால், அதை எல்லோரும் எடுத்துக்கொள்வர், ஆனால் அது மோசமாகஇருந்தால், யாரும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அது நடக்கிறதே!!
  9. நான் சீக்கிரம் வந்தால், பஸ் தாமதமாக வரும். நான் தாமதமாக வந்தாலும் பஸ் இன்னும் தாமதமாக வருகிறதே ஏனென்றால்  ஏற்கனவே   ஒரு பஸ்-ஐ தவறவிட்டு விட்டேன் 
  10. நான் எந்த பொருள் வாங்கினாலும் அது இன்னொரு இடத்தில் இன்னும் மலிவாக கிடைத்து இருக்கும் என்றே நினைக்கிறேன்
  11. நான் எந்த வரிசையில் நிற்கிறேனோ  அதைவிட பக்கத்தில் இருக்கும் வரிசை வேகமாக நகருவது போல் உணர்கிறேன் 
  12. நான் எப்போதெல்லாம் கல்லூரிக்கு வரவில்லையோ அப்போதெலாம் சரியாய் ஆசிரியர் எடுத்துவிடுவார் வருகைபதிவு
  13. நான் ரோமிங்கில் இருக்கும் போது மட்டும் அதிகமான தவறான அழைப்புகள் வரும்
  14. நான் குளியலறையில் இருக்கும் போது மட்டுமே கதவு மணி அல்லது உங்கள் மொபைல் அழைப்பு வரும்
  15. ஒரு நீண்ட காத்திருப்பிற்கு பின், இரண்டு பஸ்கள் எப்போதும் ஒன்றாக வரும், நான் ஏறும் பஸ் மட்டும் கூட்டம் அதிகமாய்ஏறும் இன்னொன்று கூட்டம் குறைவாய் இருக்கும் 
  16. காற்று எந்தப்பக்கம் அடித்தாலும் நான் பிடிக்கும் சிகரெட் புகை எப்போதும் புகை பிடிக்காதவரின் பக்கமே செல்கிறது.

    கடைசியாய் முக்கியமான ஒன்று
  17. நான் அலுவலகத்தில் நண்பர்களுடன் மொபைல் / chat / g-talk  பயன்படுத்தி அரட்டை அடிக்கும் போது ....... எப்போதும் என்னுடைய PM / PL / GM, நம் அருகில் நின்று கவனித்துக்கொண்டு இருப்பர்..

என்ன வாழ்க்கை சார் இது சே...

இன்றைய லொள்ளு 


இவர் பேட்டிங் பண்ணும் போது மட்டும் ஏன் அண்ணா இப்பிடி ஃபீல்டிங் செட் பண்ணுறாங்கே 




10 கருத்துகள்:

அம்பாளடியாள் சொன்னது…

அண்ணே மழை வாறமாதிரி இருக்கே ....அடடா கஸ்ரப்பட்டு மிளகாயை அள்ளி வச்சாச்சா?.....இப்ப வெய்யில் அடிக்குதே.......!!! ஹி...ஹி ..ஹி ...மிக்க நன்றி சகோ சிந்திக்கவைத்த பதிவுக்கு .......

Rathnavel Natarajan சொன்னது…

அருமை.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் ரமேஷ் - இப்படித்தான் நடக்கும் - குடை எடுத்துக்கிட்டுப் போனா மழை வராது - இல்லன்னா மழை வரும் . ம்ம்ம்ம்ம்

கோகுல் சொன்னது…

அட!ஆமால்ல!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

தத்துவத்தாத்தா

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

உப்பு விக்கப்போனா மழை பெய்யுது, மாவு விக்கப்போனா காற்றடிகுதுன்னு அந்த ஓரமா இருந்து பாடுங்க ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கடுமையா தடுமம் பிடிச்சிருக்குற மாதிரி மூக்கை கர்ரு புர்ருன்னு கர்சீப்ல சீந்துங்க ஜி எம் என்ன ஜி எம், ஒரு பய பக்கத்துல வரமாட்டான், நான் இப்பிடித்தான் பண்ணுவேன் ஹி ஹி....

N.H. Narasimma Prasad சொன்னது…

நீங்க ஒரு 'தத்துவத் தோப்பு' நண்பரே.

சக்தி கல்வி மையம் சொன்னது…

இன்றைய லொள்ளு சூப்பர்..

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாஸ்,
வாழ்க்கையில் சலிப்பினைத் தூண்டுகின்ற எதிர்மறையான விடயங்களைப் பற்றிய பகிர்வினைத் தந்து சிந்திக்க வைத்திருக்கிறீங்க.